பொன்னியின் செல்வன் படத்துக்கு தேங்காய் உடைத்த மணிரத்னம்..!!

 
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நிறைவு

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடர்பாகவும், படம் எப்போது வெளியாகும் என்கிற தகவலை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். சுமார் ரூ. 500 கோடியில் உருவாகும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் உடன் இணைந்து அவரே சொந்தமாக தயாரித்து வருகிறார்.

விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயம் ரவி, த்ரிஷா, பார்த்திபன், ஐஸ்வர்யா லக்ஷ்மி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


மொத்தம் இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்துக்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், கோயம்புத்தூர், ஊட்டி, பொள்ளாச்சி, மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தன. கொரோனா பரவல் காலக்கட்டத்துக்கு இடையில் இரண்டு முறை படப்பிடிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.

தற்போது பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களுக்குமான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தன்னுடை சமூகவலைதளத்தில் உறுதி செய்துள்ளது. மேலும் படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கப்படவுள்ளது. அதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் முதல் பாகம் 2022-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப்படுகிறது.

From Around the web