இன்று வெளியான மணிரத்னத்தின் ’நவரஸா’ பட டீசர்..!

 
நவரஸா

ஒன்பது கதைகள் கொண்ட ஆந்தாலஜி படமாக தயாராகி வரும் ‘நவரஸா’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா என்பவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நவரஸா’. மனிதன் ஒன்பது உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஒன்பது கதைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஒன்பது கதைகளும் ஒவ்வொரு இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். அதன்படி கவுதம் மேனன், வசந்த், பிஜோய் நம்பியார், நடிகர் அரவிந்த் சாமி, கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதீந்திரன் பிரசாத், ப்ரியதர்ஷன் போன்ற ஜாம்பவான் இயக்குநர்கள் கைவண்ணத்தில் ஒவ்வொரு கதையும் தயாராகியுள்ளது.

தமிழக ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நவரஸா’ படம் கொரோனா பரவலால் வேலையிழந்து வறுமையில் தவிக்கும் சினிமா தொழிலாளர் குடும்பங்களுக்கு உதவி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் ஒவ்வொரு வருமானமும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. அதேபோல, இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web