மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை..!!

நடப்பு சீசனில் இருந்து திடீரென விலகிய மணிமேகலை மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
manimegalai

தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்குகளில் வெற்றி பெற்று ஷிவாங்கி இறுதிச் சுற்றுக்கு முதல் ஆளாக தகுதி பெற்றார்.

இது பல்வேறு ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. நிகழ்ச்சியின் நடுவர்களான தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஷிவாங்கிக்கு அதிகம் ஆதரவு செய்கின்றனர். அதனால் தான் அவரை முதல் ஆளாக இறுதிச்சுற்றுக்கு அனுப்பியுள்ளனர் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

இன்னும் சில வாரங்கள் மட்டுமே ஒளிபர்பப்பாகவுள்ள இந்நிகழ்ச்சியில் அடுத்தடுத்த ஃபைனலிஸ்டு போட்டியாளர்கள் யார் என்று முடிவு செய்யப்படவுள்ளது. இதற்கிடையில் ஒரு வைல்டு கார்டு சுற்று நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் இந்த வாரத்துக்கான நிகழ்ச்சி ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சரத்குமார் பங்கேற்றுள்ளார். மேலும் நிகழ்ச்சியை விட்டு விலகிய மணிமேகலை தற்போது மீண்டும் வந்துள்ளார். தொகுப்பாளர் ரக்‌ஷனை காணவில்லை என்பதால், அவர் இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 

From Around the web