மணிமேகலை கட்டும் பிரமாண்டமான பண்ணை வீடு- இதோ புகைப்படம்..!!
 

தொலைக்காட்சி பிரபலம் மணிமேகலை தனது சொந்த ஊரில் கட்டி வரும் பிரமாண்டமான பண்னை வீட்டு புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
 
manimegalai

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை திடீரென வெளியேறினார். அவருடைய வெளியேற்றம் பலரையும் கலக்கமடையச் செய்தது. குறிப்பாக அந்நிகழ்ச்சியை ஆவலுடன் பார்த்து வந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அவர் கர்ப்பமாக இருப்பதன் காரணமாக நிகழ்ச்சியை விட்டு விலகியதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்தார் மணிமேகலை. அப்போது தான் தன்னுடைய சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டும் பணியில் மும்முரமாக இருப்பதாக இன்ஸ்டாவில் அவர் போஸ்ட் போட்டார்.

இதன்மூலம் புதிய தொழில் துவங்குவதற்காகவே மணிமேகலை விஜய் டிவி மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகியது தெரியவந்தது. தற்போது தனது பண்ணை வீட்டுக்கான அஸ்திவாரப் பணிகள் துவங்கியுள்ளதாக சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அதுதொடர்பாக மணிமேகலை பகிர்ந்துள்ள புகைப்படத்தில், அவரது பண்ணை வீடு பிரமாண்டமாக தயாராகி வருவது தெரியவந்துள்ளது. இந்த கட்டுமானப் பணிகளை கவனித்துக்கொள்ளவும், புதிய தொழில் வளர்ச்சி குறித்து ஆராயவதற்கும் கணவர் ஹூசைனுடன் மணிமேகலை தனது சொந்த ஊரான திருப்பூரில் செட்டிலாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web