கண்கலங்கிய மணிமேகலை..8 வருஷமா அந்த சேனலில் இருந்தேன், அப்படி சொல்லிட்டாங்க..!

சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை ஆரம்பத்தில் ஸ்டார் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலைக்கு சேர்ந்தார். கல்லூரி படிக்கும் போது பகுதி நேரமாக வேலைக்கு சேர்ந்து பிறகு முழு நேரமாகவும் எட்டு வருடங்களாக அந்த சேனலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது மணிமேகலைக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இவருடைய வளவளப்பேச்சு மற்றும் காமெடியான கிண்டல் ரசிக்க வைத்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது டான்ஸரான ஹுசேன் என்பவரை மணிமேகலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதற்கு பிறகு விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அது நிகழ்ச்சியில் ரன்னராகவும் தேர்வானார். அதற்கு பிறகு சில வருடங்களாக விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை உட்பட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அந்த நேரத்தில்தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது.
முதல் சீசனில் இவர் கோமாளியாக கலந்து கொள்ளப் போகிறார் என்ற போது அதிகமான விமர்சனங்கள் வந்தது. ஒரு லீட் கிடைத்தால் அதை வைத்தே பேசி சமாளிக்கும் மணிமேகலை எப்படி இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்க முடியும் என்று பலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் மணிமேகலையின் பெர்பார்மன்ஸ் பார்த்ததும் பலரும் வாய் அடைத்துப் போயிருந்தனர்.எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடும் மணிமேகலைக்கு அதிக பாராட்டும் வந்தது. ஆனாலும் நான்காவது சீசனில் இருந்து திடீரென்று விலகி இருந்தார். பிறகு ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாக வந்திருந்தார். நிகழ்ச்சி முடிவதற்கு கடைசி இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரியங்காவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அந்த நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேறி இருந்தார்.
இப்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர் ஒருவர், தான் குரூப் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தேன் ஆனால் இப்போது இந்த நிகழ்ச்சியின் மூலமாக தனக்குன்னு ஒரு அங்கீகாரம்
அப்போது அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் பாபா மாஸ்டர் தான் இருந்த இடத்தில் இருந்து எழுந்து வந்து மணிமேகலையை பாராட்டி, நீ இன்னமும் அதிகமாக உன்னுடைய திறமையை காட்டணும் என்று கூறியிருந்தார்.