கமலுக்கு ஜோடி த்ரிஷாவும் இல்லை; நயன்தாராவும் இல்லை- இவர்தான்..!!
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று இந்தியன் 2 ஷூட்டிங்கில் கமல் பங்கேற்று வருகிறார்.
இதையடுத்து அவர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இது கமல்ஹாசன் நடிக்கும் 234-வது படமாக தயாராகவுள்ளது. அதனால் இந்த படத்துக்கு KH234 என்று படக்குழு தற்காலிமான பெயரை வைத்துள்ளது.
முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு த்ரிஷா அல்லது நயன்தாரா போன்றோர் நடிக்கலாம் என்று கூறப்பட்டது. அதிலும் நயன்தாராவை படக்குழு ஒப்பந்தம் செய்துவிட்டதாகவே கூறப்பட்டது. தற்போது KH234 கதாநாயகியாக அவர்கள் இருவரும் நடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதன்படி இந்த படத்தில் நடிப்பதற்கு பாலிவுட் நடிகை வித்யா பாலனை மணிரத்னம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு படத்தில் வித்யா பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒருவேளை கமல்ஹாசனின் படம் உறுதியாகும் பட்சத்தில், மணிரத்னம் மற்றும் வித்யா பாலான் இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.