மீண்டும் மணிரத்னம் - விக்ரம் - ஐஸ்வர்யா ராய் கூட்டணி..!!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
vikram

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராவணன் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அப்போதே இவர்களுடைய ஜோடி பெரியளவில் பேசப்பட்டது. அதை தொடர்ந்து இருவரும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்து நடித்தனர்.

அந்த படத்தின் முதல் பாகத்தில் அவர்கள் இருவருக்கும் பெரியளவில் எந்த அறிமுகமும் நடைபெறவில்லை. ஆனால் இரண்டாவது பாகத்தில் இருவருக்குமான காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்தது. அவர்களுடைய நடிப்புக்கும் பாராட்டுக்குள் குவிந்தன.

maniratnam

இந்நிலையில் மணிரத்னம் மீண்டும் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்துக்கான பணிகள் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படத்தை தொடர்ந்து நடக்கும் என கூறப்படுகிறது.
 

From Around the web