இளையராஜா குறித்து மனம் திறந்த மணிரத்னம்..!!
 

பொன்னியின் செல்வன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இசையமைப்பாளர் இளையராஜா குறித்து மணிரத்னம் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
 
maniratnam

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பிலுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரும் 28-ம் தேதி வெளிவருகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, பெங்களூரு, திருச்சி, ஹைதராபாத் என நாட்டின் முக்கிய நகரங்களில் படக்குழுவினர் ஊடகங்களை சந்தித்து வருகின்றனர்.

அண்மையில் சென்னையில் பிஎஸ்- 2 படக்குழு செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்டோருடன் இயக்குநர் மணிரத்னமும் நிகழ்வில் பங்கேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ilayaraja

அப்போது அவரிடம் “இளையராஜாவை மிஸ் செய்கிறீர்களா”? என்கிற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மணிரத்னம், “ஆமாம் நான் மிஸ் செய்கிறேன். அவர் ஒரு ஜீனியஸ். அவரால் தான் நான் வளர்ந்தேன். என் முதல் படத்திலிருந்து அவர் இசையமைத்து வருகிறார். இளையராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இருவரையும் மிஸ் செய்கிறேன். அந்தந்த காலக்கட்டத்தில் நாங்கள் இயக்க விரும்பும் படங்களுக்கு ஏற்ப கூட்டணி மாறுகிறது என்று கூறினார். 

From Around the web