மனிஷா கொய்ராலாவின் இந்த கருத்து பாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது..! 

 
1
பிரபல நடிகை மனிஷா கொய்ராலா  பிலிம்பேருக்கு பேட்டி அளித்தபோது பல தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார். குறிப்பாக, தனக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், அதை இரு வேறு விதங்களில் தான் எதிர்கொண்டதாகவும் மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறியவர், "நான் கோகோவில் ஓட்கா கலந்து குடிப்பேன். ஆனால், எனது தொழில் நண்பர்கள் வெளியில் இதனை சொல்ல வேண்டாம், கோகோ குடிக்கிறேன் என்று சொல்லுங்கள் என தெரிவித்தனர்.

ஆனால் எனது அம்மாவிற்கு நான் ஓட்கா கலந்து குடிப்பேன் என்பது தெரியும். எனவே, அவர் ஓட்கா தான் குடிக்கிறேன் என சொல், கோகோ குடிக்கிறேன் என்று பொய் சொல்லாதே. இந்த சிறு விஷயங்களுக்கெல்லாம் பொய் சொல்ல தேவையில்லை" என தெரிவித்தார்.

இவ்வாறு சில விஷயங்களை பகிர்ந்து கொண்ட மனிஷா கொய்ராலா, ஆண் நண்பர்களுடனான பழக்கத்தையும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். தான் டேட்டிங் செல்வதாகவும், தனது ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த காலகட்டத்தில் பல நடிகைகள் நடிகர்களுடன் உடலுறவில் இருந்தனர். ஆனால், அவர்கள் அதனை வெளியில் சொல்வதில்லை. இருப்பினும், அவர்கள் பொய்தான் கூறுவார்கள் என்ற கூற்றை மனிஷா கொய்ராலா முன் வைத்துள்ளார்.

இது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் பேசிய அவர், ஹீரோக்களுக்கு பல ஹீரோயின்கள் தோழிகளாக இருந்தனர். அவர்களுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இதனால் பல நடிகைகள் பல நடிகர்களுடன் உடலுறவில் இருந்தனர் என மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார். பெரும்பாலும் வெளிப்படையாகவே பேசி வரும் மனிஷா கொய்ராலாவின் இந்த கருத்து பாலிவுட் வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.

From Around the web