மஞ்சரியின் அம்மா பகீர் குற்றச்சாட்டு..!

மஞ்சரி பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி வைரலாக உள்ளது. அதில் மஞ்சரியின் தாயாரும் கலந்துகொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் மஞ்சரி தொடர்பிலும் நிறைய சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி மஞ்சரியின் தாயார் கூறுகையில், பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் மஞ்சரி ஒதுக்கப்பட்டாங்க. அதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டோம். மஞ்சரி அங்கு அழும்போது இங்க நாங்க எல்லாருமே சேர்ந்து அழுதோம் அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு.
அதேபோல மஞ்சரி பேசும் போது சௌந்தர்யா கொடுத்த ரியாக்ஷன் மறக்கவே முடியாது. அது இப்பவும் youtube வீடியோக்கள் வந்து கொண்டு தான் இருக்குது. அதை பார்த்தால் கவலையா இருக்கும். எதற்காக இப்படி எல்லாம் ரியாக்ஷன் கொடுக்கின்றார்கள் என்று... அதேபோல அருணும் மஞ்சரிய ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காரு என்று கூறியுள்ளார்.
அதேபோல மஞ்சரியும், ஆரம்பத்துல எல்லாரும் என்னை தப்பா புரிஞ்சு கொண்டாங்க.. ஆனால் அதுக்கப்புறம் மக்களுடைய ஆதரவு எனக்கு இருந்துச்சு..
அது மட்டும் இல்லாம அருண் நான் ஏறின பஸ்ல ஏற மாட்டேன் என்று சொன்னார். ஆனால் அதற்கு பிறகு என்னுடைய திறமையையும் வலிமையையும் பார்த்து தான் நீங்க வெற்றி பெற்றவர், உங்கள் பக்கத்தில் கூட இருக்க முடியாது அதனால தான் நீங்க ஏற பஸ்ல வர மாட்டேன் என்று சொன்னதாக அவர் சொன்னது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுகின்றேன் என்று மஞ்சரி தெரிவித்துள்ளார்.