உடல் எடையை குறைத்துவிட்டாரா மஞ்சிமா..??
 

நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் அவர் உடல் எடை குறைந்து காணப்படுவதாக நெட்டிசன்கள் பலர் கமெண்டு செய்து வருகின்றனர். 
 
manjima

மலையாளத்தை குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியாக உருவெடுத்தவர் மஞ்சிமா மோகன். கடந்த 1997-ம் ஆண்டு வெளியான கலியூஞ்சல் என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், 2015-ம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் கதாநாயகியாக கால்பதித்தார்.

அதை தொடர்ந்து தமிழில் 2016-ம் ஆண்டு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.  அந்த படம் அவருக்கு சிறப்பான பெயரை பெற்று தந்தது. இதையடுத்து தமிழில் பிஸியான நடிகையாக மாறினார். மேலும் தெலுங்குப் படங்களிலும் நடித்தார்.

கடந்தாண்டு இவருக்கும் கவுதம் கார்த்திக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர் இதுவரை எந்த படங்களிலும் நடிக்காமல் உள்ளார். மேலும் எந்த படத்தையும் அவர் கமிட் செய்யாமல் இருக்கிறார். இதனால் படங்களில் இனி நடிப்பதை தொடர்வரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் சமூகவலைதளங்களில் அவர் ஆக்டிவாக தான் இருக்கிறார். சமீபத்தில் தனது கூந்தல் அழகை குறித்து மெய்சிலிர்க்கும் விதமாக அவர் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர், திருமணத்தின் போது உடல் எடை கூடியிருந்த மஞ்சிமா தற்போது மெலிந்துவிட்டதாக கமெண்டு செய்துள்ளனர்.
 

From Around the web