மீண்டும் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியார்..! அதுவும் இவர் படத்திலா..??

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகையான மஞ்சு வாரியார் நான்காவது முறையாக தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
Manju

நடிகர் திலீப்புடன் ஏற்பட்ட விவகாரத்துக்கு பிறகு மஞ்சு வாரியார் தீவிரமாக படங்களில் நடித்து வருகிறார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, அரபிக் உள்ளிட்ட மொழிகளில் பரபரப்பாக நடிக்கத் துவங்கிவிட்டார்.

மலையாளத்தில் ஒரு பெரும் சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய மஞ்சு வாரியார், 2018-ம் ஆண்டு வெளியான அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதை தொடர்ந்து துணிவு, செண்டிமீட்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு படத்தில் பாடல் கூட அவர் பாடியுள்ளார்.

Manju

இந்நிலையில் மஞ்சு வாரியார் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக எஃப். ஐ. ஆர் பட இயக்குநர் மனு ஆனந்த் இயக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்தில் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

இப்படத்தில் கதாநாயகர்களுக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியார் நடிக்கிறார். இப்படத்தை துவங்குவதற்கான பூஜை மிகவும் சிம்பிளாக சென்னையில் நடைபெற்றது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.


தமிழ் மற்றும் மலையாளத்தில் நேரடியாக உருவாகும் இப்படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்படுகிறது. விரைவில் படத்தின் கதாநாயகி உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரிவு கலைஞர்கள் குறித்து விபரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 


 

From Around the web