நயனுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்..!
Jul 24, 2024, 06:05 IST

மலையாள திரையுலகில் கடந்த 1995ஆம் ஆண்டு அறிமுகமான மஞ்சு வாரியர், 1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திடீரென நடிப்பதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு 15 ஆண்டுகள் கழித்து 2014 ஆம் ஆண்டுதான் ரீஎண்ட்ரி ஆனார் என்பதும் முதன்முதலாக தமிழில் ’அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த நிலையில், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் காரணமாக அஜித்தின் ’துணிவு’ படத்தில் நடித்தார்.
மஞ்சு வாரியர் தற்போது கையில் இரண்டு தமிழ் படங்கள் உட்பட ஐந்து படங்களை வைத்திருக்கிறார். இந்த ஐந்து படங்களும் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் அடுத்தடுத்து இந்த படங்கள் வெளியாக இருப்பதாகவும் இதில் சில படங்கள் வெற்றியடைந்தால் அவருக்கு வாய்ப்புகள் குவியும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய ’விடுதலை 2’ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த ’வேட்டையன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ’எம்புரான்’ என்ற திரைப்படத்திலும் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.