லைகா தயாரிப்பில் உருவாகி வரும் மஞ்சு வாரியார் கதாபாத்திரம் அறிவிப்பு!

 
1

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரஜினி, ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் வேட்டையன். இப்படத்தில் ரஜினியோடு இணைந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு அமிதாப் பச்சன் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திலிருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘மனசிலாயோ’ பாடல் இணையத்தில் பெரும் வைரலானது. இந்த பாடலை ஓணம் பண்டிகையை அனைவரும் ரீல்ஸாக வெளியிட்டு அசத்தினர். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, திருநெல்வேலி, மும்பை, சென்னை என பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து, தற்போது டப்பிங் பணி நடந்து வருகிறது. இசை வெளியீட்டு விழா வருகிற 20ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திரத்தின் லுக் போஸ்டரை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. அதில், ரித்திகா ரூபா என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதையடுத்து, துஷாரா விஜயன் போஸ்டரை படக்குழு நேற்று வெளியானது. இதில், அவர் சரண்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது, மஞ்சு வாரியர் கதாபாத்திரம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், மஞ்சு வாரியர் ‘தாரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


 

From Around the web