டர்பன் அணிந்து மெசேஜ் சொன்ன மஞ்சு வாரியர்..!

 
மஞ்சு வாரியார்

பிரபல மலையாள சினிமா நடிகை மஞ்சு வாரியார் டர்பன் அணிந்து பதிவிட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் மஞ்சு வாரியார். சக நடிகர் திலீப் குமாரை திருமணம் செய்து விவகாரத்து பெற்றதை அடுத்து மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார். 

ஹவ் ஓல்டு ஆர் யூ என்கிற படத்தில் நடித்து மீண்டும் வெற்றி நாயகியாக மக்கள் மனங்கள் தடம் பிடித்தார். அதை தொடர்ந்து மேலும் பல்வேறு படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘அசுரன்’ படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்கள் நடிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். மேலு ஒரு இந்திப் படத்திலும் நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் கல்பேஷ் என்பவர் இயக்கும் ’அமரேக்கி பண்டிட்’ என்கிற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். அதற்காக டர்பன் அணிந்துகொண்டுள்ள மஞ்சு வாரியார், அந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

From Around the web