சூப்பர் சிங்கர் மேடையில் கண்கலங்கிய மனோ..!
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, துலு, அசாமிஸ் என பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்திஇருப்பவர் பாடகர் மனோ.இளையராஜாவின் மனம் கவர்ந்த பின்னணி பாடகர் ஆகவும் இருந்து வந்தார் மனோ. இளையராஜா இசையில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.டப்பிங் கலைஞராகவும் மனோ சிறந்து விளங்கியுள்ளார்.
25 ஆயிரம் பாடல்களை பாடி அசத்திய மனோவுக்கு, ரிச் மான்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளனர்.
அதன்படி, பாடகர் மனோ அவர்களின் 40 ஆண்டுகால சினிமா பயணத்தை கௌரவிக்கும் வகையில், இந்த வாரம் சூப்பர் சிங்கர் ஸ்பெஷல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், 'எனக்கு இசை பிச்சை போட்டவர் இசைஞானி இளையராஜா அவர்கள்' என கூறி கண்கலங்கி அழுதுள்ள சூப்பர் சிங்கர் ப்ரோமோ தற்போது வெளியாகி கலங்க வைத்துள்ளது.