மனோபாலாவின் இறுதி நிமிடங்கள்- வீடியோ வெளியிட்ட குடும்பத்தினர்..!!
தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி உதவி இயக்குநர், இயக்குநர் மற்றும் நடிகர் என்று படிப்படியாக உச்சத்தை தொட்டவர் மனோபாலா. இவர் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். இவர் கடந்த 3-ம் தேதி கல்லீரல் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்தபடியே உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் மனோபாலாவின் இறுதி நிமிடங்கள் குறித்த வீடியோவை அவருடைய குடும்பத்தினர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், மனோபாலாவின் கையை பிடித்தபடி அவரது மகன் ஹரீஷ் தந்தைக்கு பிடித்த பாடல்களை பாடுகிறார். அதை அப்படியே அமர்ந்த நிலையில் மனோபாலா கேட்கிறார்.
இந்த வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கிறது. எனினும் குடும்பத்தினர் ஆதரவுடன் மனோபால உயிரிழந்தது குறித்து பலரும் ஆறுதல் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவுக்கு கீழ் பலரும் மனோபாலாவின் புகழ்பெற்ற வசனங்களை பதிவிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.