அபராதம் கட்ட அவகாசம் கேட்டு கோர்ட்டு வாசலில் மன்சூர்..!!

 
1

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டு ரேப் காட்சிகளில் நடித்ததை போல் த்ரிஷாவுடனும் நடிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் முடியாமல் போனது என நடிகர் மன்சூர் அலிகான் பேசியது இனையத்தில் வேகமாக பரவிய நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் இச்சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்தார் :

நான் பேசாததை பேசியதாக கூறியதற்கும் என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கும் நான் தான் நடிகை த்ரிஷா மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார் .

இந்நிலகையில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரிய நடிகர் மன்சூர் அலிகானின் வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்து அவருக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்தது.இந்நிலையில் நீதி மன்றம் விதித்த அபராத தொகையினை செலுத்த கால அவகாசம் கோரி நடிகர் மன்சூர் அலிகான் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

From Around the web