‘மா.பொ.சி’ திரைப்படம் ‘சார்’ என பெயர் மாற்றம்!
முன்னதாக, இப்படத்தின் தலைப்பு வெளியானபோது, ம.பொ.சிவஞானத்தின் பேத்தி,“மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்னும் ம.பொ.சியைப் பலர் மா.பொ.சி (தவறே எனினும்) என்றும் அழைக்கின்றனர். உச்சரிக்கையில் குறில் நெடிலாகி அதுவே எழுத்தாகும்போது நேரும் தவறு. மா.பொ.சி என்றாலும், அவருடைய உருவமே நினைவிலெழும்.
போஸ் வெங்கட் இயக்கத்தில் மா.பொ.சி என்றொரு போஸ்டரைப் பார்த்தேன். தமிழ் இயக்குநர்களுக்கு ஏன் இந்த கற்பனை வறட்சியென்று நினைத்தேன். மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானமாம். மாங்கொல்லை மயிலாப்பூரிலிருக்கும் ஒரு பகுதி; பொன்னரசனும் பொன்னுசாமியும்; கடைசிப் பெயர் சிவஞானமே. முகத்தில் மரு வைத்து மறைத்தாலும் மறைக்க முடியாதவராயிற்றே அவர் .
தமிழுக்குத் தொண்டாற்றியவர்களை நீங்கள் மதிக்கவே வேண்டாம்; ஆனால் ஏன் இப்படி அவமதிக்கிறீர்கள்? நாடறிந்த ஒரு தலைவரை, எல்லைப் போராட்ட வீரரை, சிலம்புச்செல்வரை அவருடைய பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, அவருடைய கதையில்லையென்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவருடைய குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று தெரியாதா?” என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.
 - cini express.jpg)