‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’- ஓ.டி.டி ரிலீஸ் உறுதி..!

 
மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் பட போஸ்டர்

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மோகன்லால் நடிப்பில் உருவான ’‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன், சுஹாசினி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் ‘‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’.

சுமார் ரூ. 100 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் திரையரங்க வெளியீட்டுக்கு தயாராகி வந்தது. ஆனால் கொரோனா காரணமாக அது முடியாமல் போனது. கேரளாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதனால் திரையரங்குகளை முழுமையாக திறக்க முடியாத நிலை நீடிக்கிறது.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக படம் ரிலீஸாகாமல் உள்ளது. இதை மேலும் தொடர விரும்பாத படக்குழு, படத்தை ஓ.டி.டி-யில் வெளியிட முடிவு செய்தனர். இதற்கு கேரள திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அந்த முடிவை மாற்றிக்கொள்ள தயாரிப்பு நிறுவனம் விரும்பவில்லை.

இந்நிலையில் ‘மரைக்காயர்: அரப்பிக்கடலிண்டே சிங்கம்’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் இப்படம் வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. 

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய இப்படம் விருதுகளை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web