சீயான் விக்ரமை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்!

 
1

லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வனில் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

மொத்தம் இரண்டு பாகங்களாக உருவானது. கடந்த வருடம் முதல் பாகம் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது. படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.முதல் பாகத்தில் இருந்த குறைகளை கண்டிப்பாக இரண்டாம் பாகத்தில் மணிரத்னம் நிவர்த்தி செய்துவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டாம் பாகத்தில் அவர் வரலாற்றையே மாற்றிவிட்டார் என்ற விமர்சனம் எழுந்தது.

இதற்கிடையே பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷனுக்காகவே லைகா நிறுவனம் பெரிய தொகையை செலவழித்தது. படக்குழுவுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்து அவர்களை பறந்து பறந்து ப்ரோமோஷான் செய்ய வைத்தது. அவர்களும் இந்தியாவின் பெரும்பாலான இடங்களுக்கு சென்று ப்ரோமோஷன் செய்தனர்.

அந்த ப்ரோமோஷனில் விக்ரம் அணிந்து வந்த ஆடைகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும் விக்ரம் ஓவர் ஆடம்பரம் காட்டுகிறாரோ என்றும் சிலர் பேசினர். அதுமட்டுமின்றி ப்ரோமோஷனுக்கு வர வேண்டுமென்றால் தனி விமானம் வேண்டும் என்றும் விக்ரம்தான் கண்டிஷன் வைத்ததாகவும் அந்த சமயத்தில் பேசப்பட்டது. 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷனின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் ப்ளூ சட்டை மாறன், ‘இப்படி ஓவர் சீன் போட்டதால் ஊத்திக்கொண்டதா PS 2’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.


 

From Around the web