லோகேஷ் கனகராஜை ட்ரோல் செய்த ப்ளூ சட்டை மாறன்..?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக உலக நாயகன் கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் இவருடைய புகழை இந்திய அளவில் கொண்டு சென்றது.
தற்போது நடிகர் விஜய் அவர்களை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ். இந்திய திரை உலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது….அண்மையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட பணிகளை லோகேஷ் கனகராஜ் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடந்த ஒரு தனியார் கல்லூரி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார் லோகேஷ் கனகராஜ்.அப்போது பல கேள்விகளுக்கும் பதில்களை கூறினார் அவர்…
அப்பொழுது அவரிடம் விருது பெற வந்த ஒரு மாணவி, அவருடைய காலில் விழுந்த நிலையில் அவர் சட்டென்று கோபப்பட்டு அந்த மாணவரிடம் இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என்று கூறினார்.
இந்த வீடியோ ட்விட்டர் தளத்தில் வைரலான நிலையில் அந்த வீடியோவை பார்த்து கருத்து சொல்லியுள்ளார் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். அந்த மாணவர்களை 2K Boomers என்று கூறிய அவர் லோகேஷ் கனகராஜ் மானஸ்தர் என்பதால் அந்த மாணவியை கண்டித்து கொண்டார்.
கல்லூரி வளாகத்தின் உள்ளே பிரமோஷனுக்காக திரைப்படக் கலைஞர்களை அனுமதிக்கும் போக்கு அதிகரித்து வருவதால் ஏற்படும் விளைவுகள் இவை இன்னும் என்ன கூத்தெல்லாம் அரங்கேறப்போகிறதோ!! என பதிவிட்டுள்ளார்.
2K Boomers:
— Blue Sattai Maran (@tamiltalkies) July 22, 2023
லோகேஷ் கனகராஜ் மானஸ்தர் என்பதால் அம்மாணவியை கடிந்து கொண்டார். கல்லூரி வளாகத்தினுள்... பட ப்ரமோஷனுக்காக திரைப்பட கலைஞர்களை அனுமதிக்கும் போக்கு அதிகரித்து வருவதால் ஏற்படும் விளைவுகள் இவை.
இன்னும் என்ன கூத்தெல்லாம் அரங்கேறப்போகிறதோ!!#LokeshKanagaraj pic.twitter.com/MTzUpN1ElP