தன் படத்தில் நடித்த ஹீரோக்களை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்த மாரி! 

 
1

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தனது நான்காவது திரைப்படமாக வாழைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொன்வேல், ராகுல் ஆகியோர் எதார்த்தமாக நடித்திருந்தார்கள். மேலும் இவர்களுடன் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல், ஜானகி, ஜெய் சதீஷ் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

இந்த படம் மாரி செல்வராஜ் தனது சிறுவயதில் சந்தித்த வலி என்றும் தான் அனுபவித்த ரணத்தைத் தான் படத்தில் அழகாய் காட்டியுள்ளார் எனவும் இந்த படம் பலரின் கண்ணீரோடு திரும்பி பார்க்க வைத்தது.

கடந்த 23ஆம் தேதி வெளியான வாழை திரைப்படம் இன்றுடன் 10 நாட்களை எட்டியுள்ளது. முதல் நாளிலேயே இந்த திரைப்படம் 1. 15 கோடிகளை வசூலித்த நிலையில், தற்போது மொத்தமாக 16 . 58 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், வாழைப்படத்தில் தனது வாழ்வியலை தத்ரூபமாக நடித்த படத்தின் ஹீரோக்களை விமானத்தில் அழைத்துச் சென்று அழகு பார்த்து உள்ளார் மாரி செல்வராஜ். தற்போது இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

From Around the web