அரசுக்கு வேண்டுகோள் விடுத்த மாரி செல்வராஜ்..!
சென்னை உளப்பட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் ஒரு காட்டு காட்டிய நிலையில் தற்போது புயலே இல்லாமல் கனமழையால் தென் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி திருநெல்வேலி நெல்லை தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் அப்பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயலின்போது சிரமத்தில் இருந்த மக்களை தமிழக அரசு எப்படி மீட்டதோ அதே போல் தென் தமிழகத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கிட பலரும் வலுயுறுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் வரலாறு காணாத பேரிடரில் சிக்கி தவிக்கும் தென் தமிழக மக்களை துரிதமாக செயல்பட்டு துயரில் இருந்து தமிழ்நாடு அரசு மீட்க வேண்டும் என இயக்குநர் மாரி செல்வராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாரி செல்வராஜ் கூறிருப்பதாவது :
வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது.

ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை .
வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை.
இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன் என தனது ட்விட்டர் பதிவில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை…
— Mari Selvaraj (@mari_selvaraj) December 18, 2023
 - cini express.jpg)