14 வருடங்களுக்கு முன்பு ஜீவா படத்தில் நடித்து மாரி செல்வராஜ்- வைரலாகும் புகைப்படம்..!

 
14 வருடங்களுக்கு முன்பு ஜீவா படத்தில் நடித்து மாரி செல்வராஜ்- வைரலாகும் புகைப்படம்..!

சினிமாவில் நடிக்க ஆசை பட்டு கடைசியில் இயக்குநராக மாறிப்போன பல பிரபலங்கள் தமிழ் திரையுலகிலும் உண்டு. அந்த வரிசையில் தற்போது இயக்குநர் மாரி செல்வராஜூம் இணைந்துள்ளது தான் புதிய செய்தி.

பரியேறும் பெருமாள் படத்தில் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனது முதல் படத்திலேயே தேசியளவில் கவனமீர்த்தார். ஆனால் அந்த படத்துக்கு தேசியளவில் எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதனால் பலதரப்பட்ட சினிமா கலைஞர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அதை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தேசியளவில் கவனம் பெற்றார்.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் படம் கடந்த வாரம் வெளியானது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கு இடையில் வெளியான இந்த படம் ஒரே வாரத்தில் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. பரியேறும் பெருமாள் படத்திற்கு கிடைக்காமல் போன அங்கீகாரம் நிச்சயம் கர்ணன் படத்துக்கு கிடைக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

கர்ணன் படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை அடுத்து இயக்குகிறார் மாரி செல்வராஜ். இது கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகவுள்ளது. தமிழில் வெளியான விளையாட்டு தொடர்பான படங்களில் இந்த படம் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

இதுபோன்ற தேசியளவில் கவனமீர்த்த மாரி செல்வராஜ் சினிமாவில் முதலில் நடிகராகவே அறிமுகமாகியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தில் ஜீவாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
 

From Around the web