உதயநிதிக்காக துருவ் விக்ரமை கிடப்பில் போட்ட மாரி செல்வராஜ்..!

 
உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாரி செல்வராஜ்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்துக்காக துருவ் விக்ரம் நடிப்பில் தொடங்கப்பட இருந்த படத்தை இயக்குநர் மாரிசெல்வராக் கிடப்பில் போட்டுவிட்டாராம்.

சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஒருப்பக்கம் சினிமாவிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து முழுநேர அரசியல்வாதியாக மாற அவர் முடிவு செய்துள்ளார். அதற்காக ஏற்கன்வே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் நடித்து முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி கே.எஸ். அதியமான் இயக்கத்தில் ஒரு படத்திலும், அருண்ராஜா காமராஜா இயக்கும் ஆர்டிகிள் 15 பட தமிழ் ரீமேக்கிலும் தற்போது நடித்து வருகிறார். அதை தொடர்ந்து அவர் மாரிசெல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கர்ணன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் விரைவில் சினிமாவை விட்டு விலகும் முடிவில் இருப்பதால், மாரி செல்வராஜ் இவருக்கான படத்தை முதல் இயக்கவுள்ளாராம்.

அதன்படி மாரிசெல்வராஜ் படத்துடன் நடிப்பை கைவிட உதயநிதி முடிவு செய்துள்ளார். இந்த படத்தை பா. ரஞ்சித் தயாரிக்கவுள்ளார். அதேபோல படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web