இன்று வெளியாகிறது மாரி செல்வராஜின் ‘வாழை’ டிரைலர்..!

 
1

மாமன்னன் படத்துக்கு அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்குகிறார் மாரி செல்வராஜ்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்தப் படம் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது. சிறார்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதியன்று வெளியிடப்படவுள்ளது. மேலும், இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா போன்றோரும் நடிக்கிறார்கள்.

முன்னதாக, இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், வாழை படத்தின் டிரைலர் இன்று (ஆக. 19) வெளியாகும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web