மாரிமுத்துவின் பல வருட கனவு நிறைவேறாமலே போய்விட்டதே..!

 
1

 எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் செய்து கொண்டு இருந்த போது மாரிமுத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் இது அனைவருக்குமே அதிர்ச்சியை தந்துள்ளது…தற்போது இவரது இறப்பிற்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மாரிமுத்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் அது இப்போது அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது…அதில் அவர் கூறுகையில் திருமணமாகி 27 வருடங்களாக வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வந்தோம் இப்பொது நான் சொந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளேன் என்றுள்ளார்.

சொந்த வீடு என்பது அது ஒரு கனவு மாதிரி மற்ற ஊரில் இருந்து சென்னையில் வந்த வாழ்பவர்களுக்கு சொந்த வீடு கனவு போன்று தான் இருக்கும்.என்னுடைய கனவு நிறைவேறி விட்டது தற்போது மணப்பாக்கம் பக்கத்தில் வீடு வாங்கி இருக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் அவர் சொல்லியுளளார்..

அந்த வீட்டிற்கு என்னுடைய மனைவி பெயரை வைத்துள்ளேன் என்று மாரிமுத்து கூறியுள்ளார்.இப்படி ஆசை ஆசையாய் கட்டிய வீட்டிற்குள் அவர் செல்ல முடியாமல் போனது அனைவர்க்கும் மிக பெரிய வேதனையை அளிக்கிறது..இப்படி ஒரு நிகழ்வு நடக்கவேண்டுமா என அனைவருமே வருத்தத்தில் உள்ளனர்..

From Around the web