பிரபல சின்னத்திரை நடிகைக்கு திருமணம்... டும் டும் டும் 
 

 
1

மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், தில்லாலங்கடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை சந்திரா லக்ஷ்மண் தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஸ்வந்தம் சுஜாதா மலையாள சீரியலில் நடித்து வரும் சந்திராவுக்கும், அவருடன் சேர்ந்து நடிக்கும் டோஷ் கிறிஸ்டிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து நவம்பர் 10ஆம் தேதி கேரளாவில் இருக்கும் தனியார் ரிசார்ட் ஒன்றில்  திருமணம் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் தான் கலந்து கொண்டனர்.

1

இரண்டு மாதங்களுக்கு முன்பு டோஷ் கிறிஸ்டியின் கையை பிடித்தபடி புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் திருமணம் குறித்து சந்திரா அறிவிப்பு வெளியிட்டார்.

திருமணம் எப்பொழுது என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்த நிலையில் அந்த புகைப்படம் மூலம் பதில் அளித்தார். தற்போது டோஷ் கிறிஸ்டியை தன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

1

திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ வெளியாகியிருக்கிறது. சந்திரா, டோஷுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From Around the web