மாஸ் அறிவிப்பு..!  நாளை நேரு ஸ்டேடியமே அதிர போகுது..! 

 
1
’இந்தியன் 2’  ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கம்போஸ் செய்த இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து இந்த மாதம் வெளியான நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா சற்று முன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜூன் 1ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

மிகவும் பிரம்மாண்டமாக இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் இந்த விழாவிற்கு வருகை தர இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராம்சரண் ராஜா உள்ளிட்டோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதனை அடுத்து ஜூன் மாதம் முழுவதும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்று ப்ரோமோஷன் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நிலையில் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web