படுக்கைக்கு அழைத்த நபரை மூக்குடைத்த மாஸ்டர் பட நடிகை..!

 
படுக்கைக்கு அழைத்த நபரை மூக்குடைத்த மாஸ்டர் பட நடிகை..!

இன்ஸ்டாவில் ஆபாசமாக பேசிய நபரின் குறுஞ்செய்திகளை இணையத்தில் பதிவிட்டு மூக்குடைத்துள்ளார் மாஸ்டர் பட நடிகை. இந்த விவகாரம் குறித்த விபரங்களை விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சவுந்தர்யா பாலாகுமார். அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் பாடல்கள் பாடிய அவர், விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பான பகல்நிலவு என்கிற நாடகத்தில் நடித்தும் இருந்தார்.

தொடர்ந்து இணையத்தில் வெளியான ‘யுவர்ஸ் ஷேம்புல்லி’ என்கிற குறும்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானர். இதன்மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. ரஜினி நடிப்பில் வெளியான காலா படம், ஜி.வி. பிரகாஷ் நடித்த வணக்கம் டா மாப்பிள்ளை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் சவுந்தர்யா நடித்துள்ளார்.

சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் அவருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். அந்த நபரை கேவலாக திட்டியுள்ள சவுந்தர்யா, அவர் அனுப்பிய மெசேஜுகளை இன்ஸ்டாவில் பதிவிட்டு மூக்குடைத்துள்ளார்.

பெண்களிடம் அத்துமீறும் ஆண்களை இப்படி தான் சமாளிக்க வேண்டியுள்ளது. சமூகவலைதள நிறுவனங்கள் இதுபோன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏதேனும் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவர வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளனர்.
 

From Around the web