மருமகனுக்காக அஜித் பட இயக்குநருடன் கூட்டணி போட்ட மாஸ்டர் பட தயாரிப்பாளர்..!

 
மருமகனுக்காக அஜித் பட இயக்குநருடன் கூட்டணி போட்ட மாஸ்டர் பட தயாரிப்பாளர்..!

இந்தாண்டு பொங்கலுக்கு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்ததாக புதிய படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் கதாநாயகனாக நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் மாஸ்டர். இந்த படத்தை எக்ஸ்.பி. ஃப்லிம் கிரியேட்டர்ஸ் சார்பாக நடிகர் விஜய்யின் உறவினரான சேவியர் ப்ரிட்டோ என்பவர் தயாரித்திருந்தார்.

தற்போது இவர் அடுத்ததாக புதிய படத்தை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளார். இந்த படத்தை அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணு வர்த்தன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த படத்தில் நடிகர் அதர்வாவின் இளைய சகோதரரும் சேவியர் பிரிட்டோவின் மருமகனுமான (மகளின் கணவர்) ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இது இவருடைய முதல் படமாகும். இதுதொடர்பான அறிக்கை தற்போது வெளியிடபப்ட்டுள்ளது

இன்னும் இந்த படத்திற்கு பெயர் வைக்கவில்லை. புரொடக்‌ஷன் நம்பர் 2 என்கிற பெயரில் தான் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியலை விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர்.
 

From Around the web