மறைந்த நடிகர் மயில்சாமி குடும்பத்தில் சண்டை- விவகாரத்துக்கு விண்ணப்பித்த 2 மருமகள்கள்..!!

மறைந்த நடிகர் மயில்சாமி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மருமகள்களும் விவகாரத்துக் கோரி விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகி திரையுலகினரை சோகமடையச் செய்துள்ளது.
 
 
Mayilsamy

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த மயில்சாமி, கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் காலமானார். அவருடைய திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் கவலை அடையச் செய்தது. ரசிகர்கள் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். 

மயில்சாமி உயிருடன் இருக்கும்போதே தனது அருமை நாயகம் மற்றும் யுவன் என்கிற 2 மகன்களுக்கும் திருமணம் செய்துவைத்துவிட்டார். அவருடைய மகன்கள் இருவருமே சினிமா துறையில் கிடையாது. இருவருமே வெவ்வேறு துறையில் உள்ளனர்.

mayilsamy son

மயில்சாமி இருக்கும்போதே அவரது மனைவிக்கும் இரண்டு மருமகள்களுக்கும் ஏழாம் பொருத்தம் தான். அவர் உயிருடன் இருந்தவரை, வீட்டுக்குள் நடக்கும் சச்சரவுகள் எதையும் வெளியில் செல்லாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் அவர் இறந்த பிற்பாடும் மாமியார் கொடுமை வீட்டில் அதிகரித்துள்ளதாம்.

mayilsamy son

இதை பொறுக்க முடியாமல் மருமகள்கள் இருவரும் தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்துக் கோரி விண்ணப்பித்துள்ளனர். தங்களது இரண்டு கணவன்மார்களும் இந்த பிரச்னையை கண்டுகொள்ளவில்லை என்பதால், இப்படியொரு முடிவு எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மருமகள்கள் தங்களது உறவினர்களிடம் கூறி வருகின்றனர். 
 

From Around the web