விவகாரத்து கேட்கும் மயில்சாமி மருமகன்கள்? மகன் விளக்கம்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த மயில்சாமி, கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் காலமானார். அவருடைய திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் கவலை அடையச் செய்தது. ரசிகர்கள் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மயில்சாமி உயிருடன் இருக்கும்போதே தனது அருமை நாயகம் மற்றும் யுவன் என்கிற 2 மகன்களுக்கும் திருமணம் செய்துவைத்துவிட்டார். அவருடைய மகன்கள் இருவருமே சினிமா துறையில் கிடையாது. இருவருமே வெவ்வேறு துறையில் உள்ளனர்.

இந்நிலையில் மயில்சாமியின் மருமகள்கள் இருவரும் நீண்ட நாட்களாகவே மாமியார் கொடுமையை அனுபவித்து வருவதாகவும், மயில்சாமி இருந்தவரை அந்த விஷயம் தெரியாமல் பார்த்துக் கொண்டதாகவும், அவர் இறந்ததை அடுத்து மருமகள்கள் விவகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் செய்திகள் பரவின.

இதுகுறித்து மயில்சாமியின் மகன் அருமை பிரகாசம் முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்த செய்தியில் முற்றிலும் உண்மை கிடையாது. எதற்காக எங்கள் குடும்பத்தை பற்றி இப்படி யோசிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் நலமாக மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
 - cini express.jpg)