ரஜினிக்கு தங்கச்சிகளாக நடிக்கும் மீனா, குஷ்பு- அண்ணாத்த சீக்ரெட்ஸ்..!
ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் மீனா மற்றும் குஷ்பு கதாபாத்திரங்களின் பின்னணி விபரங்கள் வெளியாகியுள்ளன.
மெகா ஹிட் வெற்றியை எதிர்நோக்கி நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இதில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சூரி, ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முன்னதாக இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனாவும், தங்கச்சியாக கீர்த்தி சுரேஷும், வில்லி கதாபாத்திரத்தில் குஷ்புவும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அது முற்றிலும் தவறான தகவல் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் மூவருமே ரஜினிகாந்தின் தங்கச்சிகளாக நடித்துள்ளனர்.
இதன்மூலம் அண்ணன் மற்றும் தங்கச்சிகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டம் தான் கதைக்களம் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல ரஜினிகாந்தின் காதலியாக படத்தில் கவுரவ வேடத்தில் நயன்தாரா நடித்துள்ள தகவலும் தெரியவந்துள்ளது. ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக அண்ணாத்த உருவாகியுள்ளது.
 - cini express.jpg)