சிறகடிக்க ஆசை என்னும் சீரியலில் கதாநாயகி மீனா ஆரம்பத்தில்...

 
1
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த சீரியலில் கதாநாயகன் அம்மாவுக்கும் பிடிக்காத பையன். கதாநாயகி மீனா பார்த்தாலே ஐயோ பாவம் என்கிற மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு வீட்டு வேலைகளையும் குடும்பத்தின் பாரத்தையும் தலையில் சுமக்க தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் மீனாவாக மனதில் பதிந்து இருக்கும் நடிகையின் பெயர் கோமதி பிரியா என்பது பலருக்கும் தெரியாது.

கோமதி பிரியா 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி பிறந்திருக்கிறார். இவருக்கு சொந்த ஊரு மதுரை தானாம். வேலைக்காக சென்னைக்கு வந்திருக்கிறார். 30 வயசாகும் இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்திருக்கிறார். அதுவும் பல ரீல்ஸ் வீடியோக்களை இவர் அடிக்கடி வெளியிட்டு வர அது இவரை பிரபலம் ஆக்கி இருக்கிறது. அது மூலமாகத்தான் இவருக்கு சின்ன திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

2018 ஆம் ஆண்டில் இருந்து சீரியலில் நடிக்கும் இவர் ஓவியா என்ற சீரியல் மூலமாகத்தான் சின்ன திரையில் அடி எடுத்து வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு வேலைக்காரன் என்னும் சீரியலிலும் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் தனியா ஒரு youtube சேனல் நடத்தி இவரும் தன்னுடைய வீடியோஸ்களை அதில் அடிக்கடி அப்லோடு செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சின்ன திரையில் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் நாயகியாக இவரும் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

From Around the web