மீனாவுக்கு கிடைத்த கடும் தண்டனை.. வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.
அதில் ரோகிணி விஜயாவுக்கு சத்யா தான் பணம் திருடினார் என்ற வீடியோவை காட்டியதும் விஜயா ஆவேசத்தில் நேராக மீனாவின் வீட்டுக்கு வருகின்றார். அங்கு இருந்த சத்யாவை இழுத்து அடித்து வெளுக்கின்றார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த மீனா விஜயாவின் கைகளை தடுத்து, நீங்க என் தம்பியை அடிப்பீங்க அதை நான் பார்த்துக் கொண்டிருக்கணுமா? அப்படி அவன் என்ன செய்தான் என்று கேட்க, நீயே பாரு என்று வீடியோவை காட்டுகின்றார்கள்.
இதை பார்த்து மீனாவும் மீனாவின் குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைகின்றார்கள். இதன்போது விஜயா இனி நீ என் வீட்டு வாசலை மிதிக்க வேண்டாம்.. உங்க அம்மா வீட்டுலையே இரு என்று மீனாவை திட்டி விட்டு செல்லுகின்றார்.
எனவே சிறகடிக்க ஆசை சீரியலில் இவ்வாறு புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இந்த வேலையை செய்தது ரோகிணி தான் என்பதை முத்து கண்டுபிடிப்பாரா? இதிலிருந்து மீனா எப்படி மீள போகின்றார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.