நயன்தாரா உடன் கைக்கோர்க்கும் மீரா ஜாஸ்மின்..!!
மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த மீரா ஜாஸ்மின், தமிழில் 2002-ம் ஆண்டு வெளியான ரன் மூலம் அறிமுகமானார். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில், தமிழ் சினிமாவிலும் அவர் பிஸியான நடிகையாக மாறினார்.
மலையாளத்தில் வெளியான ‘பாடம் ஒன்னும் விலாபம்’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் கொடி கட்டிப் பறந்த மீரா ஜாஸ்மின் தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்னைகளை சந்தித்தார்.
இதனால் சினிமாவை விட்டு விலக வேண்டி வந்தது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முனைப்பு காட்டி வருகிறார். மலையாளத்தில் மீண்டும் பரபரப்பாக நடிக்கத் துவங்கியுள்ள அவர், தமிழிலும் படங்களில் நடிக்க ஆர்வங்காட்டி வருகிறார்.
Happy to welcome on board #theTEST🏏 the super talented #MeeraJasmine ! ✨@ActorMadhavan #Nayanthara #Siddharth @sash041075 @chakdyn @onlynikil pic.twitter.com/cmNLcbojPG
— Y Not Studios (@StudiosYNot) May 9, 2023
அந்த வகையில் ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தலைவர் சஷிகாந்த் தயாரித்து இருக்கும் ‘டெஸ்ட்’ என்கிற படத்தில் மீரா ஜாஸ்மின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஏற்கனவே மாதவன், சித்தார்த் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடிக்கிறார். தற்போது டெஸ்ட் படத்தில் மீரா ஜாஸ்மினும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலான் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.