லியோ படம் குறித்து மீசை ராஜேந்திரன் பேட்டி..!

 
1

 தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளிலேயே ஒட்டுமொத்த இந்திய படங்களின் இந்த ஆண்டு வசூலை முறியடித்து சாதனை படைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் அதை உலகமகா உருட்டு எனக் கூறி வரும் நிலையில், மீசை ராஜேந்திரனும் அந்த வசூல் அறிவிப்பை நம்பவில்லை எனக் கூறியுள்ளார்.

லியோ LCU படம் இல்லைங்க சரியான குப்பை படம். அதை பார்த்துட்டு ஐசியூவுக்கு போகிற நிலைக்கு ஆளாகி விட்டேன். கண்டிப்பா ஜெயிலர் படத்தை முறியடிக்காது. படம் ஃபிளாப் தான் என அந்த பேட்டியில் மீண்டும் விஜய் ரசிகர்களை வம்பிழுத்து இருக்கிறார் மீசை ராஜேந்திரன்.

ஜெயிலர் வசூலை முந்தினால் தனது மீசையை எடுக்கிறேன் என சவால் விட்ட மீசை ராஜேந்திரன் தற்போது 2.0 படத்தின் 800 கோடி கலெக்‌ஷனை முந்தட்டும் பார்க்கலாம் என ஜகா வாங்கி உள்ளார். மேலும், நடிகர் விஜய்யே வந்து லியோ 800 கோடி வசூலை முந்தி விட்டது ராஜேந்திரன் என சொன்னால், என்னோட மீசையை எடுக்கிறேன் என தோல்வி பயத்தில் மாற்றி மாற்றி பேசி வருவதாக விஜய் ரசிகர்கள் மீசை ராஜேந்திரனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

From Around the web