கணவரை பிரிந்த மெட்டி ஒலி சீரியல் நடிகை..! 

 
1

மெட்டி ஒலி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கிருத்திகா. இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது விவாகரத்து குறித்தும் மகனை குறித்தும் ஓப்பனாக பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், தனக்கு 8 வருடத்திற்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் 83 kg எடை இருந்தேன். என் கணவர் என்னுடைய உடம்பை பார்த்து, எப்படி இருக்க பாரு.. பெருசா இருக்க என்று உடல் எடையை வைத்து சண்டை போட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சண்டை அதிகம் ஆக, இருவரும் சேர்ந்து பரஸ்பர முடிவை எடுத்து பிரிந்துவிட்டோம் என்று கிருத்திகா பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அவர் என்னை நடிக்கக்கூடாது என்று சொல்லவில்லை, 9 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது முந்தானை முடிச்சு சீரியலில் நடித்திருந்தேன். பின் மகன் பிறந்த போது, அவர்கள் வேறு நடிகையை எனக்கு பதில் நடிக்க வைத்தனர். 3 மாதம் தேவைப்பட்டது. அதையும் தாண்டி எனக்கும் கணவருக்கும் பல பிரச்சனை, குடும்பத்தில் சண்டை என்று சென்றுவிட்டது. என் அம்மா வளர்ப்பு சரியில்லை என்று கூறியதும் நானே முடிவெடுத்துவிட்டேன்.

கல்யாணமாகி 1 ஆண்டிலேயே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. என் அம்மா சிங்கிள். அப்பா இருக்கிறார், ஆனால் இருவரும் பிரிந்துவிட்டார்கள். என் அம்மாவை யாரிடமும் விட்டுக் கொடுக்கமாட்டேன். அடி போன்ற பிரச்சனைகள் வந்தும் அம்மாவிடம் கூறமாட்டேன். அவரை தப்பு சொல்லவில்லை, அவரை குறை சொல்லவும் இல்லை. அவரையும் என்ன நடந்தது என்று கேட்டால் தெரியும் என்று பலர் என்னை விமர்சித்தார்கள்.

இப்போது நான் நன்றாக இருக்கிறேன். இதை பற்றி என் உறவினர்களிடம் கூறவில்லை. நானும் அவரை அடித்திருக்கிறேன். இதற்கு பின்பும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று பிரிந்துவிட்டேன். குண்டாக இருந்ததை பலர் கிண்டல் செய்யும் போது அழுதுவிடுவேன். சீரியல் நடிகைகள் ஒழுங்காக வாழமாட்டார்கள் என்று கூறுவார்கள்.

உமாமகேஸ்வரி என்ற பெயரை சீரியலில் நடித்தப்பின் கிருத்திகா மாற்றிக்கொண்டதாகவும் மகன் பிறந்து இரண்டாவது மாதத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தேன். 10 நாட்கள் ICU-வில் இருந்தேன். இது உமாமகேஸ்வரி என்று தான் மீடியாவில் செய்திகள் வந்தது. விமர்சிப்பவர் என் வாழ்க்கைக்குள் வந்து பார்த்தால் தான் தெரியும் என்று தெரிவித்திருக்கிறார் நடிகை கிருத்திகா.

From Around the web