விரைவில் ஓடிடியில் வெளியாகிறது மெய்யழகன்...! எப்போ தெரியுமா ?
இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. அரவிந்த் சாமி, கார்த்தி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது. கடந்த செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
படத்தில் கமல் குரலில் வெளியான ‘யாரோ இவன் யாரோ’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்ததால் 18 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. இந்நிலையில், அந்தக் காட்சிகளுடன் வரும் அக்டோபர் 25-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை நெட்ஃப்ளிக்ஸில் தமிழ் தவிர்த்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Oorla irundhu nammala paaka Meiyazhagan, koodave avaroda atthaan Arulmozhiyum varaaru. Ellarum paaka ready ayirlaam, ok va? 🥰
— Netflix India South (@Netflix_INSouth) October 22, 2024
Meiyazhagan is coming to Netflix on 25 October in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi!#MeiyazhaganOnNetflix pic.twitter.com/vAvYJ7aRUq