உருவாகிறதா மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்!

 
1

மைக்கேல் ஜாக்சன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமான நிலையில் தற்போது அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் 6 வயதாக இருக்கும்போது அவர் பாடல்களை பாட தொடங்கியதை அடுத்து அவரது உருவத்தை பார்த்து பலர் கேலி செய்தனர். ஆனால் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது பாடல் மற்றும் நடனத்தால் பலரை ஈர்க்கத் தொடங்கினார்.

இந்தநிலையில் ஒரு கட்டத்தில் உலகமே போற்றும் வகையில் பிரபல பாடகர் மற்றும் நடன கலைஞராக மாறினார். 1980 களில் அமெரிக்கா மட்டுமின்றி உலகில் உள்ள பல நாடுகளில் ரசிகர்கள் அவருடைய பாடல், நடனத்திற்கு அடிமையாக இருந்தனர் என்பதும் அவரது இசை நிகழ்ச்சி என்றால் கோடி கணக்கில் வசூல் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு திடீரென அவர் மாரடைப்பால் காலமான நிலையில் தற்போது 15 ஆண்டுகள் கழித்து அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி வருகிறது. மைக்கேல் ஜாக்சன் கேரக்டரில் அவர் உறவினர் ஜாபர் ஜாக்சன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் பல முக்கிய ஹாலிவுட் பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


 

From Around the web