மைம் கோபி சார்... நீங்க சூப்பர்...   புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்றார்..!

 
1

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக காணப்படுபவர் மைம் கோபி.குக் வித் கோமாளி நிகழ்ச்சி 4 இன் இறுதிக்கட்டத்தில் இருக்கும் போது, இந்த சீசனில் நான் ஜெயித்தால் இந்த பணத்தை எனக்காக பயன்படுத்த மாட்டேன். மாறாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன் என்று கூறியிருந்தார்.அதோடு இதுவரை முடிவடைந்த சீசனில் முதல் முறையாக மைம் கோபி தான் குக் வித் கோமாளி டைட்டில் வெற்றி பெற்ற ஆண் போட்டியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில உதவிகளை செய்துள்ளார் மைம் கோபி.தற்போது அவரின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.அதன்படி முதன்முறையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்று பலரது பாராட்டையும் பெற்றுள்ளார் மைம் கோபி.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மைம் கோபி, என்னுடைய குடும்பத்தை அழைத்துச் செல்வது எப்படி கடமையோ அது மாதிரி தான் இதுவும் என்னுடைய கடமை என்று கூறியிருந்தார்.


 

From Around the web