மீண்டும் திரையுலகிற்கு திரும்பிய மீரா ஜாஸ்மின்- ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

 
மீண்டும் திரையுலகிற்கு திரும்பிய மீரா ஜாஸ்மின்- ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

தேசிய விருது வென்ற நடிகை மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த அவர், நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் ஜெயராம் நடிக்கும் படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-எண்ட்ரி தரவுள்ளார்.

ஜெயராம் - மீரா ஜாஸ்மின் நடிக்கும் படத்தை மலையாள சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் சத்தியன் அந்திக்காடு இயக்கவுள்ளார். இந்த படத்தில் ‘நான் பிராகஷன்’ படத்தில் நடித்து பிரபலமான தேவிகா சஞ்சய், சித்திக், இன்னசெண்ட் போன்ற கேரள சினிமாவின் முக்கிய நடிகர்கள் பலர் நடிக்கவுள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை செண்ட்ரல் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எஸ் குமார் என்பவர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், கே. ராஜகோபால் படத்திற்கு படத்தொகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அம்பிளி படத்தின் மூலம் பிரபலமான விஷ்ணு வினய் இந்த படத்திற்கான இசையமைப்பு பணிகளை மேற்கொள்கிறார். பி.கே. ஹரிஹரன் பாடல்களை எழுதவுள்ளார்.

மீரா ஜாஸ்மின் மீண்டும் சினிமாவில் நடிப்பது அவருடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் 2014-ம் ஆண்டு வெளியான ‘விஞ்ஞானி’ என்ற படத்தில் விவேக்குடன் அவர் நடித்தார். அதை தொடர்ந்து அவர் தமிழில் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதால், விரைவில் தமிழிலும் மீரா ஜாஸ்மின் ரீ-எண்டரி தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web