சிறையில் இருந்து வெளியே வந்தார் மீரா மிதூன்..!

 
நடிகை மீரா மிதூன்

சென்னை முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து நடிகை மீரா மிதூன் புழல் மகளிர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

சமூகவலைதளத்தில் பட்டியிலனத்தவரை தரைகுறைவாக பேசிய விவகாரத்தி போலீசார் மீரா மிதூனை கைது செய்யப்பட்டார். அவருக்கு வீடியோ எடுக்க உதவிய நண்பரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது.

அதன்படி வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலக்கத்தை தூண்டும் வகையில் நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மீரா மிதூனை போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிடுவதற்கு மீரா மிதூனுக்கு உதவியாக இருந்த அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு முறை ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினர். ஆனால் அவர்களுடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார்,  நடிகை மீராமிதுன், அவரின் நண்பர் அபிஷேக் இருவரும் சென்னை உயர் நீதிமன்றதில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்கிற நிபரந்தனையுடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு  வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து புழல் மகளிர் சிறையில் இருந்து மீரா மிதுன் வெளியே வந்தார். அவர் சிறையில் இருந்து வெளியே வரும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

From Around the web