மீரா மிதுன் யூடியூப் சேனல் முடக்கம்..?

 
1

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனின் சேனலை முடக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூப் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

தனது யூடியூப் சேனல் மூலமாக வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், பட்டியலின சமூகம் குறித்தும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் மீரா மிதுன் பேசியது சர்ச்சையானது.

அந்த ஒரு வீடியோ மட்டும் சைபர் கிரைம் போலீசாரால் அகற்றப்பட்ட நிலையில், இது போன்ற சர்ச்சைக்குரிய நூற்றுக்கணக்கான வீடியோக்கள் அவரது சேனலில் இருப்பதால் அவற்றை முடக்குவதற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

From Around the web