மிர்ச்சி செந்தில் – ஸ்ரீஜா மகனை பார்த்துள்ளீரா?

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தான் மக்களின் மனதில் ஹீரோவாக இடம்பிடித்தார் மிர்ச்சி செந்தில். இவர் ஆண்டாள் அழகர் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.இதன் பின் பல சீரியல்கள்,பல நிகழ்ச்சிகளில் வந்து மக்களிடம் பிரபலம் ஆகிவிட்டார்..
இதன்பின் மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய சீரியல்களில் நடித்தார்…அதனை தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஜீ குடும்ப விருது விழாவில் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது இது பெரிதும் ரசிகர்களால் வரவேற்க பெற்றது…
நடிகர் மிர்ச்சி செந்தில் தன்னுடைய சரவணன் மீனாட்சி சீரியலில் இணைந்து நடித்த நடிகை ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது .
இந்நிலையில், தீபாவளி வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை மிர்ச்சி செந்தில் வெளியிட்டுள்ளார்…இது பெரிதளவில் இப்போது ட்ரெண்டிங்காக இருக்கின்றது..அழகான குடும்பம் என அனைவருமே கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்..