லியோ படப்பிடிப்பில் சந்தித்த சவால்களை பகிர்ந்த மிஷ்கின்

 
1

உறை நிலைக்கு கீழான சீதோஷ்ணம் காரணமாக படக்குழுவினர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள். குளிரை தாங்க முடியாத திரிஷா காஷ்மீருக்கு வெளியே தங்கி இருந்து விமானத்தில் சென்று படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘லியோ‘ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிஷ்கின் தனது காட்சிகளை முடித்து கொடுத்து சென்னை திரும்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர்கொண்ட ‘லியோ‘ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.

படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குனராக அன்பாகவும், கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடைய, ஒரு  பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக் கொண்டிருந்தார். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத் தழுவினார். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்தப் படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகின்றேன். அவர் என்னுடன் பண்பாக நடந்து கொண்ட விதத்தையும், அவரது அன்பையும் நான் என்றும் மறவேன். ‘லியோ‘ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்“ என்று இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.

From Around the web