விஜய் சேதுபதிக்கு ஜோடியான தமிழ்நாட்டின் மிஸ். இந்தியா பிரபலம்..!

 
விஜய் சேதுபதி மற்றும் அனுகீர்த்தி வாஸ்

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் நாட்டின் முன்னணி மாடலாக இருக்கும் அனுகீர்த்தி வாஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கியவர் பொன் ராம். அடுத்ததாக இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்

இன்னும் இந்த படத்துக்கு பெயரிடப்படவில்லை. எனினும் இது விஜய் சேதுபதியின் 46-வது படம் என்பதால் தற்போதைக்கு படக்குழு ‘வி.எஸ். 46’ என்று படத்தை குறிப்பிடுகின்றனர். இந்த படத்துக்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி, பழனி ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் நாயகியாக அனுகீர்த்திவாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். திருச்சியை சேர்ந்த இவர் மிஸ். இந்தியா பட்டம் வென்றவர் ஆவார். இவர் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

From Around the web