அம்மோடியோவ்..!! 'மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெகனிங் டிரெய்லர் என்னமா இருக்கு..!!

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஃப்ராஞ்சைஸில் ஒன்று மிஷன் இம்பாஸிபிள். கடந்த 1996-ம் ஆண்டு இப்படத்தின் முதல் பாகம் வெளியானது. உலகளவில் அதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, ஒவ்வொரு பாகமாக உருவாக்கப்பட்டு வெளிவரத் தொடங்கியது.
இதுவரை 6 பாகங்கள் வெளியாகியுள்ளன. இதனுடைய ஏழாவது பாகமான ‘மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பகுதி 1’ படம் ஜூலை 12-ம் தேதி வெளிவரவுள்ளது. கடைசியாக வெளியான 2 பாகங்களை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குவைரி தான் இந்த பாகத்தையும் இயக்கியுள்ளார்.
வழக்கம் போல டாம் க்ரூஸ் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், ஹெய்லி அட்வெல், ஈசாய் மொராலெஸ், விங் ரெகமஸ், ரெப்பக்கா ஃப்ர்கியூசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமார் 290 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் தயாராகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
மிஷன் இம்பாஸிபிள் ஃப்ராஞ்சையிஸுக்கு உரித்தான அதிரடிக் காட்சிகள், உணர்வுசார்ந்த காட்சிகள் என மிகவும் அசத்தலாக உள்ளது. இந்த படத்தை எதிர்நோக்கி ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.